பெரம்பலூர்: குன்னம்; ரூ.6.52 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

schedule
2026-02-03 | 18:07h
update
2026-02-03 | 18:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Kunnam; Minister Sivasankar laid the foundation stone for new project works worth Rs. 6.52 crore and inaugurated the completed projects!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமாந்துறை, ஆடுதுறை, ஓகளூர், அத்தியூர், அகரம்சீகூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர், நன்னை, வடக்கலூர், பென்னகோணம், பெருமத்தூர், சிறுமத்தூர், கீழப்புலியூர், ஆண்டிக்குரும்பலூர், பரவாய் ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று ரூ.6.52 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Advertisement

குன்னம் சட்டமன்ற தொகுதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமாந்துறை, ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர், அகரம்சீகூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர், நன்னை, வடக்கலூர், பென்னகோணம், பெருமத்தூர், சிறுமத்தூர், கீழப்புலியூர், ஆண்டிக்குரும்பலூர், பரவாய் ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், கிராம ஊராட்சி பொதுநிதி, ஊராட்சி ஒன்றிய பொதுநிதி, 15 வது நிதிக்குழு மானியம், மாநில நிதிக்குழு மானியம், நம்ம ஊரு நம்ம அரசு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், தனிநபர் இல்ல குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், சாலைகள் பலப்படுத்தும் பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்புப் பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மோட்டார் மற்றும் பிற வேலைகள் வழங்குதல் பணி, புதிய ஆழ்துளை கிணறு நீர்மூழ்கி மோட்டார் மற்றும் குழாய்கள் அமைக்கும் பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள், பாலம் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள், நூலகம் அமைக்கும் பணி, தார் சாலை அமைக்கும் பணிகள், மயான கொட்டகை அமைக்கும் பணி, சிலாப் மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கவர்சிலாப் அமைக்கும் பணி, கைபம்பு அமைக்கும் பணி, சாலை பராமரிப்பு பணிகள் என மொத்தம் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் 57 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைத்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திருமாந்துறை நோவா நகரில் ரூ.10.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1 பேருந்து நிழற்குடை மற்றும் வயலூர், கைப்பெரம்பலூர், கருப்பட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பேருந்து நிழற்குடைகள் மற்றும் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடிட கட்டடத்தையும், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒரு வகுப்பறை கட்டிடம் மற்றும் கணினி வகுப்பறை கட்டடிட கட்டடத்தையும், நன்னையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட சிறுகுடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆய்வக கூடத்தினையும், கல்லை, ஓலைப்பாடி, பெருமத்தூர் குடிக்காடு, கீழப்புலியூர், பரவாய் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியின் மூலம் தலா ரூ.9.15 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் என மொத்தம் ரூ. 1.86 கோடி மதிப்பீட்டில் 12 பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கலெக்டர் ந.மிருணாளினி, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் அழகு. நீலமேகம், மருவத்தூர் ராஜேந்திரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், அறிவழகன், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.02.2026 - 18:17:47
Privacy-Data & cookie usage: