பெரம்பலூர்: குன்னம்; மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்களிடம் தவெக, திமுக போட்டிபோட்டு வாக்கு சேகரிப்பு! லப்பைக்குடிக்காட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்று வட்டச்சாலை அமைக்கப்படும்; அமைச்சர் சிவசங்கர் உறுதி!

schedule
2026-04-10 | 14:28h
update
2026-04-10 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Kunnam — TVK and DMK vie with one another to canvass votes among worshippers emerging from a mosque! A ring road will be constructed in Labbai Kudikadu to alleviate traffic congestion; Minister Sivasankar gives his assurance.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் உள்ள லப்பைக்குடிக்காட்டில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் உள்ளனர். சிறுபான்மையினராக இந்துகள் உள்ளிட்ட பிற மதத்தினர் உள்ளனர். இந்நிலையில், இன்று மதியம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மசூதிகளில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம், தவெக வேட்பாளர் ரேவதி, திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் போட்டிபோட்டு வாக்குகளை சேகரித்தனர்.

கிழக்கு ஜும்ஆ மசூதியில் தவெக வேட்பாளர் ரேவதி, அக்கட்சியை சேர்ந்த பேரூர் செயலாளர், பிச்சைமுஹமது உள்ளிட்ட நிர்வாகிகளுடன் தொழுகை முடித்து வந்தவர்களிடம் வெளிவரும் வாசலில் நின்று பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார்.

மேற்கு மசூதியில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்குகள் சேகரித்துவிட்டு கிழக்கு ஜும்ஆ மசூதியில் திமுக வேட்பாளர் தனது பேரூர் செயலாளர் ஜாஹீர் உசேன் உள்ளிட்ட கட்சியினருடன் சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது, கடந்த தேர்தலின் போது வாக்களித்தற்காக தீர்க்கப்படாமல் நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த ஜமாலியா நகரில் குடியிருப்பவர்களுக்கு பட்டா பெற்றுக் கொடுத்தது மற்றும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளையும் கூறினார்.

Advertisement

வரும் தேர்தலில் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், ஆய்வுப் பணி முடிந்து இருக்கும் லப்பைக்குடிக்காடு சுற்றுவட்டச் சாலையை செயல்படுத்துவேன், மேலும் பல திட்டங்களை கொண்டுவருவேன் என்றும், தற்போது டெல்லிக்கும் தமிழநாட்டிற்கும் நடக்கும் தேர்தல். இதில், பாஜக வெற்றி பெற்றால் மகாராஸ்டிராவை போல் பின்வாசல் வழியாக பிஜேபி தமிழ்நாட்டை ஆளும். அதோடு தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருக்க மாட்டார். மாறாக ஹெச்.ராஜா தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விடுவார் என்றும், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போது மதசார்பற்ற கூட்டணியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மதசார்பற்ற கூட்டணியில் பாஜகவை எதிர்ப்பதற்காக இணைந்துள்ளன என்றும் பேசிய அவர், தன்னை இந்த முறை வெற்றி பெறச்செய்து ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என பேசினார்.

முன்னதாக மசூதி நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் சிவசங்கருக்கு சால்வை அணிவித்து கவுரப்படுத்தப்பட்டார். அவருக்கு இஸ்லாம் இல்லம் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது. நேற்று வந்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருக்கு ரத்த சரித்திரம் என்ற புத்தகம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், முன்னாள் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, டாக்டர் கருணாநிதி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அமைச்சர் சிவசங்கர் தி.கீரனூர், நோவா நகர், திருமாந்துறை, கீழக்குடிக்காடு, சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், புதுப்பேட்டை, இந்திரா நகர், அத்தியூர், அ.குடிக்காடு, சாத்தநத்தம், நன்னை, ந.கிளியூர், வ.அகரம், பழைய அரசமங்கலம், வடக்களூர், கத்தாழைமேடு, மிளகாய்நத்தம், பெருமத்தூர், பெ.குடிக்காடு, பெ.நல்லூர், பென்னகரம், நமையூர்
முருக்கன்குடி, எஸ்.குடிக்காடு, கே.புதூர், கீழப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில ஈடுபட்டார்.

தவெக வேட்பாளர் ரேவதி முத்தமிழ்ச்செல்வன் லப்பைக்குடிக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அக்கட்சி தொண்டர்களுடன் வாக்குகள் சேகரித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 14:49:48
Privacy-Data & cookie usage: