பெரம்பலூர் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் : ரோவர் பள்ளி மாணவர்கள் முதலிடம்

schedule
2016-10-07 | 23:37h
update
2026-06-27 | 06:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur kuruvatta sports matches: Rover School Students First

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பாக பெரம்பலூர் குறுவட்டத்திற்கான குறுவட்ட போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த குறுவட்ட போட்டிகளில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 100 மீ, 200மீ, 300மீ, 500 மீ, 1,500 மீ மற்றும் 5,000மீ ஓட்டப்போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், மும்முனைதாண்டுதல், குண்டுஎறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை ஓட்டம் மற்றும் தொடரோட்டம் உள்ளிட்ட 43 வகையான போட்டிகள் நடத்தப்ட்டது. இதில் 800 மாணவிகள், 1,200 மாணவர்கள் என மொத்தம் 2,000 நபர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி 143 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி 49 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி 27 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தது.

இன்று (07.10.16) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறுவாச்சூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கோடி கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 06:48:31
Privacy-Data & cookie usage: