பெரம்பலூர்: 2026 புதிய அப்டேட் பல்சர் பைக்குகள் அறிமுக விழா! லிங்கம் பஜாஜ் சார்பில் நடந்தது!

schedule
2026-09-06 | 14:45h
update
2026-09-06 | 14:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Launch event for the new 2026 update Pulsar bikes—hosted by Lingam Bajaj!

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லிங்கம் பஜாஜ் நிறுவனம் ஆத்தூர், அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், பாடாலூர், கிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் கிளைகளுடன் இயங்கி வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக துடிப்புமிக்க இளைஞர்களின் நம்பிக்கை பைக்குகளாக இருப்பது பல்சர் மாடல் பைக்குகள். சாலையானலும், காடு, மலை போன்ற கரடு முரடான பாதையானலும் துடிப்புடன் அசராமல் கடப்பது. பல்சர் பைக்குகள். பல்சர் பைக்குகள் ரன், பொல்லாதவன் போன்ற சினிமா படங்களில் ஹீரோக்களின் முக்கிய துணையாக இருக்கும். பஜாஜ் நிறுவனம் இன்னும் சில மாடல் பைக்குகளை தயாரித்து வந்தாலும், இன்னும் இளைஞர்கள் முதல் ரிட்டயர் ஆகப்போகும் ஆபீசர்கள் வரை விரும்புவது இந்த பல்சர் பைக்குகள் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப அப்டேட் செய்யப்ட்டு வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டில் புதிய பல்சர் பைக் பழைய கிளாசிக் மாடல் பல்சர் பைக் போன்ற மாடலில் புதிய தலைமுறைக்கு பிடித்த வகையில் பல புதிய மாற்றங்களுன் அப்பேட் செய்துள்ளது.

Advertisement

புதிய டைமண்ட் ஃபிரேம் சேசிஸ், பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன், 5 இன்ச் TFT டிஜிட்டல் மீட்டர் மற்றும் Google Map Mirroring வசதி, ரைடிங் மோட்ஸ் & ஹசார்ட் லைட்ஸ், சத்தமில்லாமல் ஸ்டார்ட் ஆகும் Integrated Starter Generator பல்சர் இன்ஜினில் 150 சிசியில் 14 PS பவர் 14.1 டார்க்கும், 125 சிசி திறன் உள்ள என்ஜினில் 12 PS பவர்: 11.4 Nm டார்க் என வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர்-டூ-வெயிட் ரேஷியோ அட்ஜஸ்டட் சிஷ்டம் உள்ளதால், பில்லியன் ரைடருடன் செல்லும்போது வேகமான அக்சலரேஷன் மற்றும் பிக்கப் கிடைக்கும், டிராஃபிக் நேரங்களில் அக்சலேட்டர் கொடுக்காமலேயே குறிப்பிட்ட வேகத்தில் பைக் தானாக நகரும் கிரால் டெக்னாலஜி, டிஸ்பிளே மீட்டரில் மிரரிங் டெக்னாலாஜியுடன் மொபைல் ஸ்கிரீன் மேப் லைவ்வாக தெரியும் வசதியுடன் வந்துள்ளது.

பேஸ், ஸ்டாண்டர்டு, பிரிமியம் என 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பல்சர் 150 வேரியண்ட்டுகள் எக்ஸ் ஷோரூம் விலைகள்: பேஸ் வேரியண்ட் ₹1,15,000 க்கும், டாப் வேரியண்ட் சிங்கிள் ஷீட் : ₹1,22,000க்கும், டாப் வேரியண்ட் டபுள் டிஸ்க்குள் பிரேக்குகள், ஸ்பிட் சீட் கூகுள் மேப்புடன் மிரரிங்: ₹1,23,000க்கும்

125 சிசி பல்சர் பைக் எக்ஸ் ஷோரூம் விலைகள்: பேஸ் வேரியண்ட் ₹92,990க்கும், ஸ்டாண்டர்ட் சிங்கிள் ஷீட் ₹99,000 ஸ்டாண்டர்டு ஸ்பிட் சீட் ₹1,00,000 க்கும், பிரிமியம் கூகுள் மேப்புடன் : ₹1,04,000 த்திற்கும் கிடைக்கிறது. 5 கலர்களில் கிடைக்கும் இந்த பல்சர் பைக்கில் எல்.இ.டி இன்டிகேட்டர்கள், ரிபைன்ட் செய்யப்பட்ட என்ஜின், டைப் சி – மொபைல் சார்ஜர், ஹாசார்ட் லைட்டுகள், நைட்ரஜன் மோனோ சஸ்பென்சன், பென்டகன் சைலன்ஸர், டூயுப்லார் டைமண்ட் ஷேசிஸ், புல் செயின் கவர் மற்றும் ரோடு, ரெயின், டூர், ஸ்போட்ஸ் என 4 மோடுகள் உள்ளது. ஆயில் கூல்டு என்ஜின், மேம்படுத்தப்பட்ட கியர்ஸ் பாக்ஸ் என பல அம்சங்களை பஜாஜ் பைக் நிறுவனம் பார்த்து பார்த்து மேம்படுத்தி உள்ளது.

இந்த 2026 அப்டேட் பல்சர் பைக் அறிமுக விழா பெரம்பலூர் லிங்கம் பஜாஜ் ஷோரூம் அருகே உள்ள ஜி.கே ரெசிடன்சியில் நடந்தது. சீனியர் மெக்கானிக்குகள் முருகன், துரை, ரவி, சண்முகம், விஜய் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். நாகராஜன், அர்ச்சுனன், ரெங்கநாதன், சங்கர் ஆகியோர் புதிய பைக்கை அறிமுகப்படுத்தி வைத்தனர். புதிய பைக்கின் சிறப்பு அம்சங்களை பஜாஜ் நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் மனோஜ் பிரபாகர் எடுத்துரைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை லிங்கம் பஜாஜ் விற்பனை பொது மேலாளர் அருணாதேவி, கிளை மேலாளர் பிரவீனா, சர்வீஸ் பொது மேலாளர் தீபக் உள்பட ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவில், பெரம்பலூர், ஆத்தூர், அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், பாடாலூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளை சேர்ந்த மெக்கானிக்குகள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருந்தினர்களுக்கு சைவ, அசைவ அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டு, ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி லிங்கம் பஜாஜ் சார்பில் நன்றி தெரிவிக்கப்ட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 14:54:24
Privacy-Data & cookie usage: