பெரம்பலூர்: வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு!

schedule
2024-08-22 | 18:41h
update
2024-08-22 | 18:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lawyers announce boycott of court work tomorrow!

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டம் சங்கத் தலைவர் இ.வள்ளுவன் நம்பி தலைமையில் இன்று நடந்தது. அதில்,

Advertisement

கடந்த ஆக.3 அன்று கோயம்புத்தூர் வழக்கறிஞர் உதயகுமார், ஆக.20 அன்று திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜ் ஆகியோரையும் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதோடு, கொடூர படுபாதக செயலை செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும்,

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டி தமிழக முதலமைச்சரை இச்சங்கம் கேட்டுக்கொள்வதாகவும்,. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கீழமை நீதிமன்றங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி நாளை 23-08-2024 வெள்ளி கிழமை ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்தும் சங்க உறுப்பினர்கள் விலகியிருப்பதென ஏகமனமதாக தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டது.

செயலர் சேகர், பொருளாளார் சிவராமன், உள்ளிட்ட சங்க வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 13:25:18
Privacy-Data & cookie usage: