பெரம்பலூர்: நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் திருவாரூக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்!

schedule
2026-09-07 | 13:30h
update
2026-09-07 | 13:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lawyers stage a human chain protest opposing the relocation of the Consumer Redressal Court to Tiruvarur.

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடந்தினர். அதில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை 14 ஆக குறைத்து, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை திருவாரூருக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவை அச்சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதனால், பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் வழக்கறிஞர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். இம்முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டியும், தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் பெரம்பலூரில் செயல்படவும் அல்லது திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்துடன் இணைத்திடவும் தமிழக அரசு, மத்திய அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை உடனடியாக கொண்டு செல்லும் வகையில் இன்றும் மற்றும் நாளையும் இரு நாட்கள் மட்டும் அச்சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியிருப்பதுடன், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் வி.சேகர், பொருளாளர் பி.சிவராமன், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்நாதன், கனகராஜ், மூத்த வழக்கறிஞர் வாசுதேவன் மற்றும் சங்கத்தின் முக்கி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.09.2026 - 13:35:53
Privacy-Data & cookie usage: