பெரம்பலூர்: கர்நாடகவில் தமிழர்களை சுட்டு கொன்றதை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2026-08-21 | 16:08h
update
2026-08-21 | 16:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lawyers stage a protest condemning the shooting death of Tamils ​​in Karnataka!

Advertisement

பெரம்பலூர் வழக்கறிஞர்கள், அச்சங்கத்தின் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் கர்நாடக மாநிலத்தில், அப்பாவி தமிழர்கள் 3 பேரை கர்நாடக வனத்துறை சுட்டு கொன்றதை கண்டித்தும், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் கடந்த ஆக.19 முதல் 3 நாட்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வந்தனர். இன்று மாலை புதிய பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் செயலாளர் வி.சேகர், பொருளாளர் சிவராமன், வழக்கறிஞர்கள் தமிழ்ச்செல்வன், காமராஜ், கனராஜ், செந்தில்குமார், செந்தில்நாதன், சின்னப்பா, பேரா.முருகையன், வினோத், ஹரி, காடூர் கவியரசன், மதுபாலன் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் திராளக கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.08.2026 - 17:35:43
Privacy-Data & cookie usage: