பெரம்பலூர்: மாவட்ட கலெக்டரை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்; வரும் 17ம் தேதி நடத்துகின்றனர்!

schedule
2026-08-01 | 11:34h
update
2026-08-01 | 11:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lawyers to stage a protest condemning the District Collector on the 17th!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டார வழக்கறிஞர்கள், வழக்காடிகள், பொதுமக்கள் சார்பாக மாவட்ட கலெக்டர் ஷரண்யாவை கண்டித்து வரும் ஆக. 17 அன்று காலை கலெக்டர் ஆபீஸ் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இது குறித்து வழக்கறிஞர்கள் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்ட உரிமையியல் நீதிமன்றம் உடனிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க G.O.நெ.319ன் கீழ் 06.04.2017 தமிழ்நாடு முழுவதும் உத்தரவிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் குன்னம் மற்றும் வேப்பந்தட்டை பகுதியில் மேற்படி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால், ஆலத்தூர் வட்டம், ஆலத்தூரில் இதுநாள் வரை மேற்படி நீதிமன்றம் அமைக்கப்படாமல் இருந்தது. பின்னிட்டு வழக்கறிஞர்கள் ஆகிய நாங்கள் பலமுறை மனு அளித்தும், பல கட்ட முயற்சி எடுத்தும், G.O.நெ.99ன் கீழ் 24.02.2026 அன்று மீண்டும் ஆலத்தூரில் மேற்படி நீதிமன்றம் அமைக்க தமிழ்நாடு அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னிட்டு நாங்கள் மேற்கொண்ட முயற்சியில் முந்தைய மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆலத்தூரில் உள்ள பழைய வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டிடத்தை ஒதுக்கி தர உத்தரவிட்டார். மாவட்ட நீதிபதியும் மேற்படி இடத்தினை பார்வையிட்டு இடம் போதுமென ஒப்புக் கொண்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மாற்றப்பட்டு புதிதாக சரண்யா மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்படி புதிய மாவட்ட ஆட்சியர் சரண்யா மேற்படி பழைய மாவட்ட ஆட்சியர் மிருணாளினியின் உத்தரவினை உதாசீனப்படுத்தி, மேற்படி, பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுமார் 15க்கு 20 அடி அளவுள்ள கட்டிடத்தை மட்டுமே வழங்க இயலுமென கடிதம் அனுப்பி, மேற்படி நீதிமன்றத்தினை திறக்க தடையாக இருந்து வருகிறார்.

Advertisement

எனவே, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சரண்யாவின் மெத்தனப் போக்கை கண்டித்து ஆலத்தூர் வட்டார வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் சார்பாக வரும் 17.08.2026ந் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், பொதுமக்கள் அதற்கு ஆதரவு வழங்க கோரியும் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.08.2026 - 11:42:02
Privacy-Data & cookie usage: