Perambalur: Legislative Assembly elections; Border Security Force personnel who came to work alongside the police welcomed!
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பணிக்காக இன்று சிவகாந்த் பாத்தியா, Assistant Commandant தலைமையில் Border Security Force (BSF) எல்லையோர காவல் படையினர் அதிகாரி ஒருவரும், 35 காவல் பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்து அறிக்கை செய்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் கர்ணன் தலைமையில் சேலம் ரயில்வே ஜங்சனுக்கு சென்ற போலீசார் வரவேற்று அங்கிருந்து அழைத்து வந்தனர். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்துள்ள எல்லையோர காவல் படையினர் பெரம்பலூர் ரோவர் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் காலத்தில் மாவட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இவர்கள் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.