பெரம்பலூர்: குழந்தைகள், முதியோர் இல்லங்கள், விடுதிகள், தனியார் பள்ளி விடுதிகள் நடத்த உரிமம் பெற வேண்டும்; கலெக்டர் அறிவிப்பு!

schedule
2026-01-30 | 14:52h
update
2026-01-30 | 14:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Licenses are required to operate children’s homes, old age homes, hostels, and private school dormitories; Collector’s announcement!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள், குழந்தைகள் விடுதிகள், மகளிர் விடுதிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் கீழ் செயல்பட்டு மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், அனைத்தும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) விதிகள் 2014 மற்றும் 2015-ன் படியும், முதியோர் இல்லங்கள் அனைத்தும் பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச் சட்டம் 2007-ன்படியும் கட்டாயம் பதிவு செய்து செயல்படுத்திட வேண்டும். எனவே, இது போன்ற இல்லங்கள் மற்றும் விடுதிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உரிமம் பதிவு செய்யாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைப்பேசி எண்ணினை 04328 226209 தொடர்பு கொள்ளலாம் அல்லது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாக வருகைதந்து பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.01.2026 - 15:17:12
Privacy-Data & cookie usage: