பெரம்பலூர்: லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி; 2 பெண்கள் உள்பட 6 பேர் காயம்!

schedule
2025-08-29 | 17:41h
update
2025-08-29 | 17:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Load auto overturn accident; One victim; 6 people including 2 women were injured!

பெரம்பலூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும், 2 பெண்கள் உள்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் வேலை செய்து விட்டு இன்று மாலை, ஆட்டோ ஒன்றில், ஜார்கண்ட் மாநிலம் பகோடர் பகுதியை சேர்ந்த லஷ்மன் சிங் சேர்வன் மகன் ஜகீஸ்வர் குமார் சிங் மற்றும் இந்திரா சிங் மகன் தக்லால் சிங், திருச்சி கன்னியாக்குடியை சேர்ந்த சின்னக்குட்டி மனைவி முத்துலட்சுமி (49), திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள தேவிமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி சரசு (57), பெரம்பலூர் நாரணமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்த் (28), தூத்துக்குடி காட்டுநாயக்கன் பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் லட்சுமணகார்த்தி (29), ஆகியோர் பெரம்பலூரை நோக்கி ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை தூத்துக்குடி கரடிக்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் மாதவன் என்பவர் ஆட்டோவை ஓட்டினார்.

Advertisement

பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது சோமண்டாபுதூர் பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழந்து விபத்திற்குள்ளானது. இதில் ஜகீஸ்வர் குமார் சிங் சம்பவ இடதிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ பயணித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த போன ஜகீஸ்வர் குமார் சிங்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் – ஆத்தூர் சாலை வாகனங்களின் எண்ணிக்கை ஏற்பவும், சீரற்று இருப்பதே இந்த விபத்துகளுக்கு காரணம் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:44:18
Privacy-Data & cookie usage: