Perambalur: Loan Mela for BCs, MBCs, Denotified Communities, and Minorities; Collector’s Announcement!
டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன் திட்டம், ஆட்டோ கடன் திட்டம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விவசாயிகளுக்கான நீர்பாசன மானியக் கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் லோன் மேளாக்கள் 14.08.2026 அன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 18.08.2026 அன்று குன்னம் வட்டம், திருமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 28.08.2026 அன்று வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெறவுள்ளது.
டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் இன மக்களும், டாப்செட்கோ கடனுதவி திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இத்திட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படும். புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெறவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதி சான்று நகல், வருமான சான்று நகல், இருப்பிட சான்று நகல் ஆகிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கான நீர்பாசன கடன் பெற விண்ணப்பதாரர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெற்று வழங்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், அலுவலர்களை அணுகலாம். எனவே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் லோன் மேளாக்களில் கலந்து கொண்டு மேற்படி கடன் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.