பெரம்பலூர்: இயற்கை விவசாயத்திற்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை கடன் ; IOB வங்கியில் விழிப்புணர்வு கூட்டம்!

schedule
2025-09-16 | 16:58h
update
2025-09-16 | 16:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Loans of Rs. 5 lakh to Rs. 5 crore for organic farming; Awareness meeting at IOB Bank!

பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கிளையில் அமுல் ரிச் ப்ளஸ்-வுடன் இணைந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் கடன் திட்டமான ஹரித் கிராந்தி (இயற்கை வேளாண்மை) கடன் திட்டத்தின் மூலம் தனி விவசாயிக்கு ரூ.ஐம்பது லட்சம் வரையிலும் , FPO / FPC-களுக்கு ரூ.5 கோடி வரையிலும் கடன் கொடுக்கும் இயற்கை வேளாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

Advertisement

ரிச் ப்ளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன், திட்டத் தலைமை ஸ்ரீதர் ஸ்ரீநிவாசன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி சென்ட்ரல் ஆபீசின் முதன்மை மேலாளர் கே.ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத் குமார், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மேலாளர் இளவேனில் மற்றும் ஐம்பது மேற்ப்பட்ட விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடன் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். இந்தியன் ஒவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் முருகையன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 08:36:46
Privacy-Data & cookie usage: