பெரம்பலூர்: லாரி

அரசு பஸ் மோதல்; 4 பேர் காயம்!

schedule
2025-12-02 | 15:41h
update
2025-12-02 | 15:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lorry-government bus collision; 4 injured!

சென்னையிலிருந்து அரசு பஸ் இன்று காலை பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் அடுத்த அல்லிநகரம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது .அந்த பஸ்சை பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தைச் சேர்ந்த பிரபு ( 52) என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனரான பெரம்பலூரை மோகன்ராஜ் உடன் இருந்தார். அரியலூரில் இருந்து புறப்பட்டு பஸ் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள அல்லிநகரம் கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அல்லிநகரம் ரவுண்டானா பகுதியில் தனியார் உணவு விடுதி அருகே நின்று கொண்டிருந்த சிமெண்ட் பல்கர் லாரியின் பின்பகுதியில் பஸ் எதிர்பாரா விதமாக மோதி விபத்திற்குள்ளானது

Advertisement

இதில், அரசு பஸ்சின் முன்பகுதி கண்ணாடி உடைந்து பலத்த சேதம் அடைந்தது. இச்சம்பவத்தில் அரசு பஸ் ஒட்டிய டிரைவர் பிரபுவிற்கு நெஞ்சு பகுதியில் ஸ்டேரிங் மோதி காயம் ஏற்பட்டது. அதே போல் நடத்துனர் மோகன்ராஜ்க்கு முகத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டு காயம் ஏற்பட்டது. மேலும், பஸ்சில் பணி முடித்துச் பயணித்த நடத்துனர்கள் பெரம்பலூரை சேர்ந்த அசோக்ரத்தினம், கிருஷ்ணாபுரம் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரியலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 03:44:39
Privacy-Data & cookie usage: