ஸ்கூட்டர் மோதி விபத்து; தாய், மகள் பலி! மகன் பலத்த காயம்! தப்பி சென்ற லாரிக்கு போலீசார் வலைவீச்சு!
Perambalur: Lorry-Scooter Collision — Mother and Daughter Killed; Son Severely Injured! Police Launch Manhunt for Fleeing Lorry!
திருச்சி மாவட்டம், கருடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி வினிதா (30), இவர் கொளக்காநத்தத்தில் கடை வைத்துள்ளார். வினிதா தனது மகன் ஹேமநாத் (10), ஹேமாஸ்ரீ (8) இருவரையும் பெரம்பலூரில் சிலம்பம் கோடைக்கால பயிற்சி வகுப்பிற்கு செல்ல தனது ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு கொளக்காநத்தம் கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தார். அய்யலூர் குடிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டி எதிரில் இருந்து புளியமரத்தில் மோதி அருகில் இருந்த ஓடைக்குள் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதில், வினிதா, ஹேமாஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஹேமநாத் பலத்த காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் விபத்தில் சிக்கிய வினிதா, ஹேமாஸ்ரீ உடல்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காகா அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் ஹேமநாத் உறவினர்களிடம் தெரிவித்தாவது: தனது அம்மா, தங்கை, தானும் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த ஓடையில் விழுந்தாகவும், அதை பார்த்த லாரி டிரைவர் நிற்காமல் தப்பி சென்றுவிட்டதாகவும், காயங்களுடன் ஓடையில் மேலே ஏறி வந்து சாலையில் சென்றவர்களிடம் தாயையும், தங்கையையும் காப்பாற்றக் கூறியதன் பேரில் அங்கிருந்தவர் வந்து பார்த்த போது தனது தாய், தங்கை இறந்து விட்டதாக இந்த துயரச் சம்பவம் குறித்து தெரிவித்த விதம் அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியது. அதோடு, ஹேமநாத், அவனது தங்கை ஹேமாஸ்ரீ இருவரும் சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி பள்ளி படித்து வருவதோடு சிலம்ப போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றும் வந்துள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.