பெரம்பலூர்: லாரி

வேன் நேருக்கு மோதல்; ஒருவர் பலி! போலீசார் விசாரணை!

schedule
2025-05-01 | 07:38h
update
2025-05-01 | 07:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Lorry-van collision; one dead! Police investigating!

பெரம்பலூர் அருகே லாரியும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மோர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் கலைச்செல்வன் (வயது 30). இவர் நேற்றிரவு பெரம்பலூரில் இருந்து துறையூரை நோக்கி லோடு வேனை ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வேன் பெரம்பலூர் – துறையூர் மாநில நெடுஞ்சாலையில் மங்கூன் அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது துறையூரில் இருந்து அரியலூரை நோக்கி வந்த லாரி மீது லோடு வேன் மோதியது. இதில் லோடு வேன் டிரைவர் கலைச்செல்வன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைச்செல்வனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 19:15:16
Privacy-Data & cookie usage: