பெரம்பலூர்: சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு மறுவிற்பனை செய்தவர் கைது!

schedule
2025-06-29 | 15:39h
update
2025-06-29 | 15:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for illegally purchasing government liquor bottles and reselling them at a higher price!

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி தனிப்படையினர் போலீசார் சிறப்பு ரோந்து சென்ற போது, தொண்டைமாந்துறை அருகே உள்ள டாஸ்மாக் ஒயின் ஷாப் அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவரை தனிப்படை போலீசார் அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அரும்பாவூர் மருதையான் கோவில் தெருவை சேர்ந்த மதி மகன் மருதபாண்டி (39) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 180 ml அளவுள்ள எட்டு வகையான 240 பாட்டில்கள் மற்றும் 650 ml அளவுள்ள (Beer – 40 பாட்டில்கள்) என மொத்தம் 280 பாட்டில்கனை பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது போன்று அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 10:40:46
Privacy-Data & cookie usage: