பெரம்பலூர்: அரசு தடை செய்த 2.9 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்தவர் கைது!

schedule
2025-08-13 | 17:24h
update
2025-08-13 | 17:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for possessing 2.9 kg of gutka banned by the government!

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தில் சித்ரா என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் ஹான்ஸ், 450 கிராம் விமல் பாக்கு 840 கிராம் V1-பான் மசாலா என மொத்தம் 2.930 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மருவத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 20:32:40
Privacy-Data & cookie usage: