பெரம்பலூர்: தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது!

schedule
2025-05-02 | 18:46h
update
2025-05-02 | 18:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for possessing 4 kg of banned gutka for sale!

பெரம்பலூர் மாவட்ட தனிப்படையினர் நடத்திய சோதனையில், கீழக்கணவாய் நடுத்தெருவை சேர்ந்த ராஜு மகன் ரெங்கசாமி (51). இவருக்கு சொந்தமான கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. தனிப்படையினர் ரெங்கசாமியை கைது செய்து, .ஹான்ஸ் (3.300-கி.கி), 2.கூல்லீப் (855-கிராம்) மொத்தம் – 4.155 கிலோ கிராம், ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பெரம்பலூர் ரூரல் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

வழக்குப் பதிவு செய்த போலீசார் கடை உரிமையாளர் ரெங்கசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 21:20:07
Privacy-Data & cookie usage: