பெரம்பலூர்: அரசு தடை செய்த 4 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்தவர் கைது!

schedule
2025-08-08 | 13:46h
update
2025-08-08 | 13:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for possessing 4 kg of gutka banned by the government!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், துங்கபுரம் கிராமத்தில் பழனிவேல் மகன் சிவகுருநாதன் (40) என்பவர் நடத்தி வரும், தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படை காவலர்கள் அவரை கைது செய்த குன்னம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ஹான்ஸ் – (4 கிலோ) விமல் பாக்கு (37 கிராம்) V1-பான் மசாலா (23 கிராம்) என மொத்தம் 4.060 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன், வழக்குப் பதிவு செய்த போலீசார்
நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 21:36:55
Privacy-Data & cookie usage: