Perambalur: Man arrested for possessing about 1 kg of gutka banned by the government!
பெரம்பலூர் மாவட்ட தனிப்பபடை போலீசார் நடத்திய சோதனையில், பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் பெரியசாமி (52) என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 700-கிராம் ஹான்ஸ், 126 கிராம் கூல் லீப், 150 கிராம் விமல் பாக்கு, மற்றும் 150-கிராம் V1-பான் மசாலா என மொத்தம் 1.126 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மங்களமேடு போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.