பெரம்பலூர்: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தவர் கைது!

schedule
2025-05-14 | 15:47h
update
2025-05-14 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for possessing banned gutka items!

பெரம்பலூர் மாவட்டத்தில் தனிப் படை போலீசார் நடத்திய சோதனையில் அய்யலூர் கிராமத்தில் அறிவுடைநம்பி (59) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் கைது செய்த தனிப்படை போலீசார் மருவத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்து ஹான்ஸ் (4.800-கி.கி), விமல் பாக்கு (1.716-கி.கி) மற்றும் V1-பான் மசாலா (1.560-கிலோ) என மொத்தம் சுமார் 8 கிலோ, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இது போன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 21:07:15
Privacy-Data & cookie usage: