பெரம்பலூர்: அரசால் தடை செய்த குட்கா பொருட்களை வைத்திருந்தவர் கைது!

schedule
2025-06-14 | 19:24h
update
2025-06-14 | 19:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for possessing gutka items banned by the government!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் மேட்டுச்சேரி கிராமத்தில் மாணிக்கம் மகன் பால்ராஜ் (48) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் பால்ராஜை கைது செய்து வ.களத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து ஹான்ஸ் (40-கிராம்), கூல்லீப் (300-கிராம்), விமல் பாக்கு (3.750-கிலோ கிராம்) மற்றும் V1-பான் மசாலா (1.500-கிலோ கிராம்) என மொத்தம் – 5.590 கிலோ கிராம் எடையளவு உள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 12:55:30
Privacy-Data & cookie usage: