பெரம்பலூர்: அரசு தடை செய்த 106 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

schedule
2025-11-05 | 18:35h
update
2025-11-05 | 18:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for selling 106 kg of gutka products banned by the government!

பெரம்பலூர் மாவட்டத்தில் தனிப்படையினர் கடைகளில் நடத்திய சோதனையில் சிறுவாச்சூர் ராம் நகரை சேர்ந்த தர்மலிங்கம் மகன் வெங்கடேஷ் (25) , என்பவரின் வீட்டில் இருந்து அரசு தடைசெய்த குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றதை கையும் களவுமாக பிடித்த தனிப்படை போலீசார் கைது செய்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் வெங்கடேசனிடமிருந்து 64.500 – கிலோ கிராம் ஹான்ஸ் 5.947 – கிலோ கிராம் கூல்லீப், 16.275 – கிலோ கிராம் விமல் பாக்கு, 7.500 – கிலோ கிராம் V1-பான் மசாலா மற்றும் 12.600 – கிலோ கிராம் தம்பா மசாலா என மொத்தம் – 106.822 கிலோ கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இது போன்று கஞ்சா, குட்கா போன்ற அரசு தடை செய்த போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 19:37:22
Privacy-Data & cookie usage: