பெரம்பலூர்: அரசு தடை செய்த 7 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

schedule
2025-10-08 | 15:19h
update
2025-10-09 | 08:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Woman arrested for selling 7 kg of gutka banned by the government!

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அலமேலு (45) என்பவர் தனக்கு சொந்தமான ரவி மளிகை கடையில் அரசு தடை செய்த குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றதை தனிப்படை கண்டுபிடித்ததுடன், அவரை கைது செய்து 2.100 கிலோ கிராம் ஹான்ஸ், 3.525 கிலோ கிராம் விமல் பாக்கு, 1.410 கிலோ கிராம் V1-பான் மசாலா, என மொத்தம் 7.035 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மருவத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 12:07:48
Privacy-Data & cookie usage: