பெரம்பலூர்: அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 4 கிலோ குட்கா பொருட்களை விற்க வைத்திருந்தவர் கைது!

schedule
2025-03-20 | 16:11h
update
2025-03-20 | 16:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for selling around 4 kg of gutka banned by the government!

பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பட்டி கிராமத்தில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் அதே ஊரை சேர்ந்த குமார் (75)என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது.

Advertisement

சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்து விமல் பாக்கு (25 பண்டல் – 2.650 kg) V1-பான் மசாலா (28 பண்டல் – 680 கிராம்) ஹான்ஸ் (2 பண்டல் – 600 கிராம்) மொத்தம் – 3.930 கிலோ எடையுள்ள சுமார் ரூ.10,300 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குமாரை சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 06:56:29
Privacy-Data & cookie usage: