பெரம்பலூர்: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவர் கைது; 1.2 கிலோ பறிமுதல்! போலீசார் நடவடிக்கை!

schedule
2025-04-21 | 15:26h
update
2025-04-21 | 15:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for selling banned gutka products; 1.2 kg seized! Police take action!

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு தனிப்படை போலீசார் குட்கா உள்ளிட்ட அரசு செய்த பொருட்களை விற்பனை குறித்து சோதனையில் இன்று ஈடுபட்டனர். வாலிகண்டபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, தங்கவேல் மகன் கருப்பையா (50) என்பவர் அவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில், சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் கருப்பையாவிடம் இருந்து 4 ஹான்ஸ் பண்டல் 1.2 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 06:56:23
Privacy-Data & cookie usage: