பெரம்பலூர்: தடை செய்த குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது!

schedule
2025-05-19 | 16:08h
update
2025-05-19 | 16:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for selling banned gutka products!

பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் எளம்பலூர் கிராமத்தில் ரகுராமன் (43) எளம்பலூரில் உள்ள அரசு பள்ளி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் அவரை கைது செய்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

வழக்கு பதிவு செய்த போலீசார் ஹான்ஸ் (95 பாக்கெட் – 1.900 kg) விமல் பாக்கு (20 பாக்கெட் – 0.300 கிராம்) A1 பான்மசாலா (15 பாக்கெட்- 0.210 கிராம்) கூல் லீப் (20 பாக்கெட் – 0.240 கிராம்) டைரக்டர் (14 பாக்கெட் – 0.220 கிராம்) என மொத்தம் 2.870 kg எடையுள்ள ரூ. 6850 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ரகுராமனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 02:38:39
Privacy-Data & cookie usage: