பெரம்பலூர் : தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்றவர் கைது!

schedule
2025-02-08 | 17:05h
update
2025-02-08 | 17:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for selling banned Kerala lottery tickets online!

பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அரும்பாவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்திய போது கிருஷ்ணாபுரம் ரோகினி டீ ஸ்டால் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை செல்போன் பயன்படுத்தி சுப்பிரமணி மகன் ராஜா (43) என்பவர் ஆன்லைன் மூலம் விற்றுக் கொண்டிருந்தர். அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்து ஆன்லைன் மூலம் விற்பனைக்கு பயன்படுத்திய 2 செல்போன்களையும் பறிமுதல் செய்ததோடு, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.06.2026 - 00:52:34
Privacy-Data & cookie usage: