பெரம்பலூர்: அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது!

schedule
2025-07-18 | 15:57h
update
2025-07-18 | 15:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man arrested for selling gutka products banned by the government!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் குன்னம் அண்ணாநகர் பகுதியில் செல்வம் மகன் லட்சுமணன் (49) என்பவர் தனக்கு சொந்தமான அம்மன் மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் லட்சுமணணை கைது செய்து, அவரிடமிருந்து ஹான்ஸ் (1-கிலோ), விமல் பாக்கு (647 கிராம்) V1-பான் மசாலா (247 கிராம்) என மொத்தம்- 1.864 கிலோ கிராம் ஆகிய குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து குன்னம் போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 21:03:01
Privacy-Data & cookie usage: