பெரம்பலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை; 1 லட்சம் அபராதம்!

schedule
2025-12-24 | 13:48h
update
2025-12-24 | 13:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Man sentenced to double life imprisonment and fined ₹1 lakh for raping a mentally challenged woman!

கடந்த 2022 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கின் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு, மற்றும் கற்பழிப்பு செய்ததாக கே.எறையூர் கிராமத்தை சேர்ந்த வையாபுரி மகன் ராஜீ (55) என்பவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு Cr.No : 08/2022 U/s 376 (2) (1), IPC வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜீ என்பவர் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 376 (1) IPC பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், 376 (2) (n) IPC Act – பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் என மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். உத்தரவின் போலீசார் ராஜுவை சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 08:22:48
Privacy-Data & cookie usage: