Perambalur – mangoon substation power outages in areas tomorrow
பெரம்பலூர் அருகே உள்ள மங்கூன் துணை மின்நிலைய பகிர்மானத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை வியாழக்கிழமை (செப்.8) மின் விநியோகம் இருக்காது, என செயற்பொறியார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உபட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களான குரும்பலூர், மேலப்புலியூர், திருப்பெயர், நாவலூர், கே.புதூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், குரூர், மாவலிங்கை, சிறுவயலூர், விராலிப்பட்டி, நக்கசேலம், அடைக்கம்பட்டி, வேலூர், சத்திரமனை, கீழக்கணவாய், பொம்மனப்பாடி, பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நாளை வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மங்கூன் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.