Perambalur: Manjapai Award for educational and commercial institutions that implemented the ban on plastic products; Collector’s information!
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். இந்த விருதிற்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சமும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். விருதிற்கான சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர் / அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (நகல்) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அ பிரிவு, அலுவலகத்தில் 15.01.2026 அன்றுக்குள் சமர்ப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிபப்தில் தெரிவித்துள்ளார்.