பெரம்பலூர்: 6 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடக்க முயன்ற கொத்தனார் கைது!

schedule
2026-06-03 | 19:58h
update
2026-06-03 | 19:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mason arrested for attempting to behave indecently with a 6-year-old girl!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் , பாடாலூர் அருகே 6 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடக்க முயன்ற 60 வயது கொத்தனாரை போலீஸார் கைது செய்தனர்.

பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் ஆச்சிமுத்து ( 60). இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். அப்போது சிறுமி கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் ஆச்சிமுத்துவை மடக்கி பிடித்து பாடாலூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் ஆச்சிமுத்துவை கைது செய்ததுடன் ஆச்சிமுத்து மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.06.2026 - 20:27:41
Privacy-Data & cookie usage: