பெரம்பலூர்: சிறுவாச்சூரில் பெருமளவு தூய்மை பணி ; எம்.எல்.ஏ முன்னிலையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

schedule
2026-08-13 | 13:34h
update
2026-08-13 | 13:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Massive cleanliness drive in Siruvachur; Collector inaugurates the initiative in the presence of the MLA.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில், சுதந்திர திருநாளை முன்னிட்டு “குப்பையில்லா பெரம்பலூர் மாவட்டம்” என்ற முன்னெடுப்பின் கீழ் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் , பெருமளவு தூய்மை பணியை கலெக்டர் ஷரண்யா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவகுமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சாமியப்பா நகர், பெருமாள் கோவில், வெங்கடேசபுரம் வடக்கு மகளிர் விடுதி அருகில், வடக்குமாதவி ரோடு உழவர் சந்தை அருகில், ஆலம்பாடி ரோடு அருகில், வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் பள்ளி பின்புறம், திருச்சி பிரதான சாலை பேருந்து பணிமனை அருகில் ஆகிய இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் அரும்பாவூர் பெரியசாமி கோவில், குரும்பலூர் தெப்பக்குளம், பூலாம்பாடி பூபதி குட்டை, லெப்பைக்குடிக்காடு பெரங்கியம் செல்லும் பாதை ஆகிய இடங்களிலும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் குளம், நான்கு ரோடு முதல் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை (கறிவிருந்து உணவகம் அருகில்), வேப்பந்தட்டை வடக்கு பெட்ரோல் பங்க் அருகில், வ.களத்தூர் அகரம் கிராமம் செல்லும் வழி, செட்டிக்குளம் டாஸ்மாக் கடை அருகில், பாடாலூர் காவல் நிலையம் எதிரில், அகரம்சீகூர் ஊராட்சி வெள்ளாறு பாலம் கீழ் பகுதி, குன்னம் அரியலூர் செல்லும் சாலை ஆகிய இடங்கள் கண்டறியப்பட்டு பெருமளவு தூய்மை பணிகள் கல்லூரி மாணவர்கள், நேரு இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள், பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த பணியாளர்கள் இணைந்து இந்த மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாதந்தோறும் இந்த மாபெரும் தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தூய்மைப் பணியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே நேரடியாகத் களத்தில் இறங்கி, பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளைச் சுத்தம் செய்து, தூய்மையே நாட்டின் பெருமை என்பதால் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுத்தினார்.

தூய்மையின்போது சேகரிக்கப்படும் நெகிழி உள்ளிட்ட கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.08.2026 - 13:47:42
Privacy-Data & cookie usage: