பெரம்பலூர்: 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை!

schedule
2026-10-09 | 13:18h
update
2026-10-09 | 13:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Maturity amount for beneficiaries of the Girl Child Protection Scheme!

Model

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்புத் தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை பெற வேண்டிய பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது முதிர்வு தொகை பெற வேண்டிய நிலுவையில் உள்ள பயனாளிகளின் விவரம் https://Perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதிர்வு தொகைக்கு வைப்புத்தொகை இரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், பயனாளியின் வங்கி கணக்குப் புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் (தாய் மற்றும் மகள் இருவருக்கும்) ஆகிய சான்றுகளுடன் முதிர்வுத் தொகை கோரி சமர்ப்பிக்கும் பட்சத்தில் முதிர்வுத் தொகையானது பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.10.2026 - 13:21:45
Privacy-Data & cookie usage: