பெரம்பலூர்: கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் மே தின கொண்டாட்டம்!

schedule
2024-05-01 | 15:56h
update
2024-05-01 | 15:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: May Day celebration on behalf of Grill Producers Association!

பெரம்பலூரில் தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க மாவட்ட கிளை சார்பில் மே தினவிழா மாவட்ட தலைவர் ஜோதிஸ்வரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் திருநாவுக்கரசு, டவுன் கிளை தலைவர் ஜோதிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமார் (எ) ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் பச்சையப்பன், மாநில செயலாளர் ரவீந்திரன், மாநில பொருளாளர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Advertisement

பின்னர் தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தலைவர் பாபு, மண்டல துணை தலைவர் கதிரேவன், இளங்கோவன், கிளை தலைவர்கள் செந்தில்குமார், நீலமேகம், அருண்குமார், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

படவிளக்கம் : பெரம்பலூரில் கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க மாவட்ட கிளை சார்பில் நடந்த மே தினவிழாவில் மாநில தலைவர் பச்சையப்பன் பேசுகிறார். அருகில் மாவட்ட நிர்வாகிகள் ஜோதிஸ்வரன், ராஜா, சரவணன் ஆகியோர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 11:39:34
Privacy-Data & cookie usage: