பெரம்பலூர்: விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் சார்பில் மே தின பேரணி!

schedule
2026-05-01 | 14:58h
update
2026-05-01 | 14:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: May Day rally on behalf of the VCI Workers’ Liberation Front!

Advertisement

பெரம்பலூரில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் துறைமங்கலம் 3 ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை வரை பேரணி நடந்தது, பின்னர், தொழிலாளர்களின் பாதுகாப்பை சட்டத்தின் மூலம் நிலை நாட்டிய தொழிலாளர்களின் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, சங்கத்தின் பெயர் பலகைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட மாவட்ட துணை செயலாளர் தங்க.சண்முகசுந்தரம், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாள், தொழிற்சங்க நிர்வாகிகள், துறைமங்கலம் தலைவர் முத்துசாமி, செயலாளர் செல்லையா, பொருளாளர் செல்வராஜ், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 14:59:52
Privacy-Data & cookie usage: