பெரம்பலூர் : ஆண்களுக்கான வீட்டு உபயோக சாதனங்கள் சேவை மற்றும் பழுது நீக்கல் இலவச பயிற்சி!

schedule
2024-09-26 | 16:24h
update
2024-09-26 | 16:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur : Men’s Home Appliance Service & Repair Free Training!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் உபயோக சாதனங்கள் சேவை மற்றும் பழுது நீக்கல் பயிற்சி வரும் 03.10.2024 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

30 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

19 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Advertisement

பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 01-10-2024 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளவும்,

மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை 04328-277896, 84890 65899, 94888 40328 தொலைப்பேசிகள் மூலமாக தொடர்பு கொள்ளலாம், என அம்மையத்தின் இயக்குனர் ஆனந்தி அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 01:41:48
Privacy-Data & cookie usage: