பெரம்பலூர்: மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவர் குணமடைந்த பின்பு உறவினரிடம் ஒப்படைப்பு!

schedule
2025-07-01 | 16:06h
update
2025-07-01 | 16:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mentally ill man who wandered around was handed over to his relatives after recovering!

Advertisement

பெரம்பலூர் நகரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த உஸ்மான் பாஷா (37) என்பவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ மருதமுத்து கடந்த 20.05.2025 அன்று பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தார்.

பின்னர், அங்கு அவருக்கு மனநல மருத்துவர் அசோக் சிகிச்சை அளித்தார். நலம் பெற்ற அவரை கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த உஸ்மான் பாஷா என்பது தெரிய வந்ததையடுத்து, அவரின் மாமா ஹர்திக் பாஷா, என்பவரிடம், எஸ்.எஸ்.ஐ மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர் நல்ல முறையில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா நல்லமுறையில் உறவினரிடம் ஒப்படைக்க உதவிய அனைவரையும் பாராட்டினார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 22:39:23
Privacy-Data & cookie usage: