பெரம்பலூர்: 2 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்கலாம்: ஆர்.டி.ஓ தகவல்!

schedule
2025-09-19 | 18:28h
update
2025-09-19 | 18:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mini buses can apply to operate on 2 new routes: RTO information!

பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் / குக்கிராமங்கள் / குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக சிற்றுந்து வாகனத்திற்கான புதிய விரிவான திட்டம் 2024 வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்து இயக்க 2 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு 18.09.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அ.குடிக்காடு முதல் வாலிகண்டபுரம் பிள்ளையார் கோவில் வரை மற்றும் வாலிகண்டபுரம் முதல் அ.குடிக்காடு வரை ஆகிய இந்த 2 வழித்தடங்களில் மின் பஸ்களை இயக்க விரும்புபவர்கள் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி 30.09.2025க்குள் பரிவாகன் இணையதளம் வாயிலாக கட்டணம் ரூ.1,500 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.1600 செலுத்தி, பெரம்பலூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பெறப்படும் பட்சத்தில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இது தொடர்பான சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் நேரடியாக பெரம்பலூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவ தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 10:30:14
Privacy-Data & cookie usage: