பெரம்பலூர்: மினி வேன் ஓடையில் பாய்ந்து விபத்து: ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்! 4 பேருக்கு தீவிர சிகிச்சை!!

schedule
2026-02-22 | 17:30h
update
2026-02-22 | 17:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Mini van falls into stream, one dead; 9 injured! 4 in intensive care!!

பெரம்பலூர் அருகே வளைகாப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மினி வேன் பள்ளத்தில் பாய்ந்ததால் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் 4 பேர் உயிருக்கு அபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் சக்திவேல் (50). இவரது மகன் துரை முருகன் (35). ராமச்சந்திரன் மகன் நவநீதன் (15) அம்மாபாளையத்தை சேர்ந்த பூபாலன் மனைவி அமுல் பிரியா (42). புது விராலிப்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஆதிசேஷன் (15). சிதம்பரம் மகன் அருணாசலம் (60). ஆறுமுகம் மகன் தங்கபாண்டியன் (48) இவரது மகன் ராகுல் (14). நாட்டார் மங்கலத்தை சேர்ந்த பிச்சமுத்து மகன் தனபால் (36) ஆகியோர் ஒரே உறவினர்கள். இவர்கள் இன்று செட்டிகுளத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று மாலை சுமார் 6.30 மணி அளவில் மினி வேன் ஒன்றில் சிறு வயலூரில் இருந்து புதுவிராலிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். மினி வேனை திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் மகன் ராமச்சந்திரன் (40). வண்டியை ஒட்டி உளளார் ‌ அப்போது எதிர்பாராத விதமாக ஓடையில் மினி வேன் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். பின்னர் வேனில் பயணத்தவர்களில் 9 பேர் காயம் அடைந்தனர். இதில் தங்கபாண்டியன் தனபால் ராகுல் அமுல் பிரியா நான்கு பேரும் மிக ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கறித்து வழக்கு பதிவு செய்த பாடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டிரைவர் ராமச்சந்திரன் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 22:16:37
Privacy-Data & cookie usage: