Perambalur: Minibus project on new routes; Minister Sivashankar, A.Raja MP, inaugurated!
பெரம்பலூர் மாவட்டத்தில் 31 மினி பஸ்களை, புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024ன் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கான சிற்றுந்து சேவைகளை நீலகிரி எம்.பி ஆ.ராசா, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் இன்று காலை பெரம்பலூர் பாலக்கரையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதன்மை செயலாளர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு,, கலெக்டர் கிரேஸ் ஆகியோர் தலைமையும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.
பேருந்து வசதி கிடைக்கப்பெறாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் 3,103 சிற்றுந்து சேவைகளை தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் முதல் நத்தக்காடு, ஆய்குடி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முதல் பெரியவடகரை, செட்டிக்குளம், விசுவகுடி, அம்மாபாளையம் முதல் துறைமங்கலம் மின்சாரத்துறை அலுவலகம், களரம்பட்டி முதல் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல் வாலாஜா நகரம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் முதல் தனலட்சமி சீனிவாசன் பல்கலைக்கழகம், பாடாலூர் முதல் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் எதுமலை, கேந்திரவித்யாலயா பள்ளி முதல் அழகாபுரி, கிருஷ்ணாபுரம் முதல் கொட்டாரக்குன்று, கோனேரிப்பாளையம் முதல் கீழப்புலியூர், வேப்பந்தட்டை முதல் வி.களத்தூர் உள்ளிட்ட ஏற்கனவே சிற்றுந்துகள் இயக்கப்பட்ட 30 வழித் தடங்களிலும், செங்குணம் முதல் செஞ்சேரி வரை புதிய வழித்தடத்திலும் என மொத்தம் 31 சிற்றுந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் துணை போக்குவரத்து ஆணையர் (திருச்சி) ஜெயக்குமார், நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் , மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் பரமேஸ் குமார், நகரமன்ற துணைத் தலைவர் ஆதவன், வட்டாரப்போக்குவரத்து அலுவலர் திரு.சரவணபவ, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் சிவசங்கர், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.