பெரம்பலூர்: ரூ.6.54 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்!

schedule
2026-02-12 | 07:42h
update
2026-02-12 | 07:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister S.S. Sivasankar laid the foundation stone for new works worth Rs. 6.54 crore and inaugurated completed works!

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதடி, செட்டிக்குளம், வேப்பந்தட்டை, நூத்தப்பூர், வெங்கலம், கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, பெரியம்மாபாளையம் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில், பொதுநிதி 15வது நிதிக்குழு திட்டம், சிறு கனிமங்கள் மற்றும் சுரங்கத்திட்டம், ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும்,

சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள், மோட்டாருடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, வன சாலை மேம்பாடு செய்யும் பணி, நியாய விலை கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளையும் தொடங்கி வைத்தார்.

Advertisement

பாடாலூர், திருவளகுறிச்சி, நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், கீழக்கணவாய், அம்மாபாளையம், தண்ணீர்பந்தல் ஆயுதப்படை அலுவலகம், வாலிகண்டபுரம், தம்பை, அயன்பேரையூர் – தைக்கால், திருவாளந்துறை, பசும்பலூர், வெள்ளுவாடி, நெற்குணம், முகம்மது பட்டினம், தொண்டமாந்துறை, அரும்பாவூர், வேப்பந்தட்டை ஆகிய இடங்களில் சிறு கனிமங்கள் மற்றும் சுரங்கத் திட்டம், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, 15வது நிதிக்குழு திட்டம், சிறுபான்மை பொது நல நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பேருந்து நிறுத்தம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம், பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள், பாலம், முஸ்லிம் மயானத்தின் சுற்றுச்சுவர் என மொத்தம் ரூ.3.17 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.6.54 கோடி.

போலீஸ் எஸ்.பி. அனிதா, டி.ஆர்.ஓ. கண்ணன், அறங்காலர் குழுத் தலைவர் கலியபெருமாள், அட்மா சேர்மன் வீ.ஜெகதீசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், துரைசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் டி.சி.பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி, சங்கீதா, ராமயி, ஜெயபால் வட்டாட்சியர்கள் முத்துக்குமார் (ஆலத்தூர்), பாலசுப்பிரமணியன் (பெரம்பலூர்), துரைராஜ் (வேப்பந்தட்டை ) மற்றும் ஒப்பந்தாரர் அரசலூர் சுதாகர், அரும்பாவூர் பேரூராட்சித் தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்ந்திரன், வக்கீல் என்.ராஜேந்திரன், பெரியம்மாபாளையம் கே.ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், வல்லபன், நல்லத்தம்பி, வெள்ளுவாடி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 06:01:55
Privacy-Data & cookie usage: