Perambalur: Minister Sivasankar inaugurated the bridge and tarmac works worth Rs. 6.05 crore!
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் இன்று ரூ.6.05 கோடியில் மதிப்பிலான திட்ட பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி தலைமையிலும், சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையிலும் தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 40 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணிணையும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியினையும், அயோத்தி தாசர் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் தார் சாலையிணையும், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 கோடியில் பாலம் கட்டுதல் மற்றும் லாடபுரம் பிரிவு சாலை மேம்பாடு செய்தல் திட்டப் பணிகளையும் அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேலப்புலியூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியில் ரூ. 7.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் திறந்து வைத்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ம.ராஜ்குமார், பீ.டி.ஓ செல்வகுமார், தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், லாடபுரம் செம்புலி, வி.ஏ.ஓ ராமதாஸ், அர்ஜுனன் மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள், நெடுவாசல் எஸ் ஆர் டி, பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.