பெரம்பலூர்: BS6 ரக 7 புதிய டவுன் பஸ்களை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

schedule
2025-12-15 | 19:24h
update
2025-12-15 | 19:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister Sivasankar flagged off 7 new BS6 type town buses!

பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாணடில் BS 6 ரக 7 புதிய பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூரில் இருந்து வாலிகண்டபுரம் வழியாக திருவாளந்துரை, பெரம்பலூரில் இருந்து சிறுவாச்சூர்-மருதடி-நாட்டார்மங்கலம் வழியாக செட்டிகுளம், பெரம்பலூரில் இருந்து சத்திரமனை – செட்டிகுளம் வழியாக பழையவிராலிப்பட்டி, பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை – தொண்டமாந்துரை – அரும்பாவூர் வழியாக கோரையாறு செல்ல இரண்டு பேருந்துகள், பெரம்பலூரில் இருந்து கிருஷ்ணாபுரம், அரும்பாவூர் வழியாக அ.மேட்டூர், பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை, பிம்பலூர், பசும்பலூர் வழியாக வெள்ளுவாடி ஆகிய வழித்தடங்களில் 7 புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், துரைசாமி, திமுக மாவட்ட துனனணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், போக்குவரத்துறை அதிகாரிகள், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், நல்லத்தம்பி, மதியழகன், டாக்டர் வல்லபன், ஜெகதீஸ்வரன், மாவட்ட துணை செயலாளர்டி.சி.பாஸ்கர், தொமுச தலைவர் கே.கே. குமார், சங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், முன்னாள் வேப்பூர் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், அரசு போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஸ்குமார், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், கோட்ட மேலாளர் ராம்குமார், பெரம்பலூர் கோட்ட துணை மேலாளர் (தொழில்நுட்பம்) எம்.எஸ்.ஜி. புகழேந்தி ராஜ், பெரம்பலூர் கிளை மேலாளர் தண்டாயுதபாணி, திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் டி.ஆர்.சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 09:48:50
Privacy-Data & cookie usage: