பெரம்பலூர்: மாற்றுத் திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம்: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

schedule
2026-03-07 | 02:05h
update
2026-03-07 | 02:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister Sivashankar inaugurated the Viluthugal Integrated Service Center for the differently-abled.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.31.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விழுதுகள் சேவை மையத்தை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

Advertisement

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் உலக வங்கி இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிவதற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை நடத்துகிறது. பெரம்பலூர் மாவட்டம் 2ம் நிலையில் ஆரம்பித்து, மாவட்டத்தில் ஒரு வருவாய் உட்கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் மற்றும் வட்டார அளவில் 4 வட்டாரத்திலும் ஒரு ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையமும் செயல்பட உள்ளது.

இந்த மையத்தில் இயன்முறை சிகிச்சை மற்றும் ஆக்குபேசனல் தெரப்பி, சிறப்பு கல்வி மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் செவித்திறன் உள்ளவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் உளவியல் ஆலோசனை ஆகியவை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் பெரம்பலூர் ஒன்றியத்தில் கோனேரிப்பாளையம் விபிஆர்சி கட்டிடத்திலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் செயல்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், நகராட்சி உதவி செயற்பொறியாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 16:19:04
Privacy-Data & cookie usage: