பெரம்பலூர்: ரூ.1.52 கோடி மதிப்பில் 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்!

schedule
2025-05-10 | 13:37h
update
2025-05-10 | 13:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister Sivasankar laid the foundation stone for 10 new projects worth Rs. 1.52 crore!

போட்டோ: புதுவேட்டக்குடி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் ரூ.1.52 கோடி மதிப்பிலான 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பணிகளை தொடங்கி வைத்தார்.

Advertisement

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் குன்னத்தில் ரூ.16,45,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, கொளப்பாடியில் ரூ.29,70,000 மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டம் பணி, வேப்பூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.8,34,000 மதிப்பீட்டின் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதுவேட்டக்குடியில் ரூ.31,40,000 மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணி, ரூ.8,10,000 மதிப்பீட்டில் வரகூர் மெயின் ரோட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி, காடூர் ஊராட்சி நல்லறிக்கையில் ரூ.16,45,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணி,

மாநில நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.10,34,000 மதிப்பீட்டில் புதுவேட்டக்குடி வளைஞ்சான் ஏரி தூர்வாரும் பணி, காடுர் ஊராட்சிக்குட்பட்ட நல்லறிக்கையில் ரூ.6,58,000 மதிப்பீட்டில் நாச்சியார் ஏரி தூர்வாரும் பணி, ரூ.14,65,000 மதிப்பீட்டில் புது ஏரி தூர்வாரும் பணி, மத நல்லிணக்க நிதியின் கீழ் மூங்கில்பாடி ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.10,00,000 மதிப்பீட்டில் மயான சாலை பலப்படுத்தும் பணி, என மொத்தம் ரூ.1,52,01,000 மதிப்பீட்டில் 10 புதிய திட்ட பணிகளுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி,திமுக பொதுக்குழு உறுப்பினர் PSR @ பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் அழகு. நீலமேகம், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், குன்னம் தாசில்தார் சின்னதுரை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 06:17:30
Privacy-Data & cookie usage: