பெரம்பலூர்: ரூ.3.56 கோடியில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

schedule
2025-06-22 | 15:20h
update
2025-06-22 | 15:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister Sivashankar laid the foundation stone for works worth Rs. 3.56 crore and opened the completed works for public use.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேனூர், துங்கபுரம், வேப்பூர், பரவாய், கல்லை, ஓலைப்பாடி, கோவிந்தராஜபட்டிணம், வயலப்பாடி, வ.கீரனூர், வீரமநல்லூர், வேள்விமங்கலம், ரெட்டிக்குடிக்காடு, வசிஷ்டபுரம் ஆகிய கிராமங்களில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (22.06.2025) ரூ.3.56 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ் வேப்பூர், கல்லை, ஓலைப்பாடி, கோவிந்தராஜபட்டிணம், வயலப்பாடி, வ.கீரனூர், வீரமநல்லூர் ஆகிய இடங்களில் தலா ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, குன்னம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தேனூர் மின் அலுவலகம் அருகிலும், துங்கபுரம் – அண்ணாநகர் குடியிருப்பு பகுதியிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அருகிலும் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

Advertisement

மேலும், ஊராட்சி பொதுநிதியின் கீழ் தேனூர் கிராமத்தில் ரூ.6.73 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் மற்றும் 95 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணி, துங்கபுரம் ஊராட்சி அண்ணா நகரில் ரூ.5.54 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் மற்றும் 47 எண்ணிக்கையிலான வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, வ.கீரனூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல், மோட்டார் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணி, ரெட்டிக்குடி காடு கிராமத்தில் ரூ.6.39 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மற்றும் 142 எண்ணிக்கையில் வீட்டு குழாய் இணைப்பு வழங்கும் பணி, வேள்விமங்கலம் சாலை கீழப்பெரம்பலூர் – திடீர் குப்பம் சாலை வழி பெருமாள் கோவில் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வயலப்பாடி ஊராட்சியில் ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, வயலப்பாடி ஊராட்சியில் ரூ.10.70 லட்சம் மதிப்பீட்டில் கொடுக்கான் குளம் தூர்வாரும் பணி, தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் துங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஆண்கள்) ரூ.7.78 லட்சம் மதிப்பிட்டிலும், வேள்விமங்கலம் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பிட்டிலும், கோவிந்தராஜ பட்டினம் – பூங்கா நகரில் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டிலும், சிறிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி,

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பரவாய் முதல் ஆண்டிக்குரும்பலூர் வரை ரூ.149.13 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, என மொத்தம் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், வேப்பூரில் முழு நேர நியாய விலை கடையும், கல்லை கிராமத்தில் ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடமும், தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வசிஷ்டபுரம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால்குளிரூட்டும் மையம் என மொத்தம் ரூ30.59 லட்சம் மதிப்பீட்டிலான 3பணிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த பால் குளிரூட்டும் மையத்திற்கு புதியதாக 63KV புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தடையின்றி மின்சார சேவை வழங்கிட இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இன்று மட்டும் ரூ.3.56 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முன்னாள் சேர்மனும், ஒன்றிய செயலளாமான அழகு.நீலமேகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.05.2026 - 01:14:09
Privacy-Data & cookie usage: