பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

schedule
2023-12-02 | 16:18h
update
2023-12-02 | 16:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Minister Sivasankar provided welfare assistance to the differently abled

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 112 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் தலைமையில் வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

பின்னர், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலி, பீரோ போன்ற உபகரணங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் சி.பாஸ்கர், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 21:20:13
Privacy-Data & cookie usage: